இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.      மீன ராசியினருக்கு குருவே இலக்கின அதிபதியாகவும், மேலும் ஜீவன ஸ்தான அதிபதி ஆகவும் வருகிறார்.  குரு மீன ராசிக்கு அதிபதியனாலும் 10வது வீட்டுக்கு அதிபதி ஆவதால் கேந்திர ஆதிபத்திய தோஷம் உண்டு. ஆகவே மீன ராசிக்கு குரு வலுக்க கூடாது மாறாக குரு வலுவிழந்து இருப்பது மிகவும் நல்லது. மேலும் குரு எந்த இடத்தில இருக்கிறார் என்பது மிக மிக முக்கியம். குரு தான் இருக்கும் இடத்தை வைத்தே பலனை தருவார்.   இப்பொழுது குரு  பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். இந்த நிலை ஒரு வகையில் நல்லது, மேலும் மிதுன ராசி மீன ராசிக்கு 4வது இடம் ஆகும். 4ம் இடம் என்பது சுகஸ்தா...