Skip to main content

2013 Rasi Palan: குரு பெயர்ச்சி பலன்கள் (மீன ராசி)


இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். 

மீன ராசியினருக்கு குருவே இலக்கின அதிபதியாகவும், மேலும் ஜீவன ஸ்தான அதிபதி ஆகவும் வருகிறார். குரு மீன ராசிக்கு அதிபதியனாலும் 10வது வீட்டுக்கு அதிபதி ஆவதால் கேந்திர ஆதிபத்திய தோஷம் உண்டு. ஆகவே மீன ராசிக்கு குரு வலுக்க கூடாது மாறாக குரு வலுவிழந்து இருப்பது மிகவும் நல்லது. மேலும் குரு எந்த இடத்தில இருக்கிறார் என்பது மிக மிக முக்கியம். குரு தான் இருக்கும் இடத்தை வைத்தே பலனை தருவார். 

இப்பொழுது குரு பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதிரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். இந்த நிலை ஒரு வகையில் நல்லது, மேலும் மிதுன ராசி மீன ராசிக்கு 4வது இடம் ஆகும். 4ம் இடம் என்பது சுகஸ்தானம் எனப்படும். ஆக இந்த குரு பெயர்ச்சி மீன ராசிக்கு தொழில் விசயத்தில் சற்று கூடுதலான நல்ல பலனை அளிக்கும். 


ஆனால் 10ம் வீட்டுக்கு 4வது வீடு என்பது 7ஸ்தானம் என்பதால், சில நேரங்களில் தொழிலில் சற்றே மந்த சூழ்நிலையையும் உருவாக்கும். முழுமையான திருப்தி என்று இல்லா விட்டாலும் மீன ராசியினருக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று திருப்தியான நிலை அவர்கள் பணியில் கிடைக்கும். இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.


31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:


தொழில் விஷயங்கள் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். மீன ராசியினரிடம் எதையும் நிதானமாக அணுகும் குணங்கள் இருக்கும். தம்மிடம் உள்ள வேலையை எவ்வளவு சுலபமாக முடிக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக முடிப்பார்கள். மீன ராசியினர் நேர்மையுடன் செயல் ஆற்ற விருபுவார்கள், அதன்படி செயல் படுவார்கள். 


08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் மீன ராசி மற்றும் மீன இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.

மீன ராசியினர் தொழிலில் சற்று இழுபறியான நிலையினை சந்திப்பார்கள். எல்லா வேலைகளையும் சற்று சிரமப்பட்டு முடிப்பார்கள். மனதளவில் சற்றே தளர்வு அடைவார்கள். மீன ராசியினர் குறுக்கு வழியில் சென்று நினைத்த காரியத்தை அடைய முயற்சிக்க கூடும்.


02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:


மீன ராசியினர் நினைத்த காரியத்தினை சிரமம் இன்றி முடிப்பார்கள். தொழில் விசயங்களில் சாதகமான நிலை ஏற்படும். மனதளவில் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பொதுவாக மீன ராசியினர் நினைக்கும் காரியங்கள் நிறைவேறும் நேரம் இது. 


13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:


இந்த காலம் சற்று அனுகூலம் இல்லாமல் இருக்கும் காலம் இது. ஆகவே முக்கியமான பிரச்சினைகளை சற்று தள்ளி போடுவது நல்லது. மனம் சற்று சோர்வு அடைந்து காணப்படும். தொழிலில் சாதகமான நிலை இருக்காது. ஆகவே தொழில் சம்பந்த பட்ட முக்கிய முடிவுகளை எடுக்காமல் சற்று தள்ளி போடுவது நல்லது. 


30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:


மீன ராசியினர் இது வரையில் சந்தித்து வந்த எதிர் மறையான போக்கு மாறி தொழிலில் நம்பிக்கையான சூழ்நிலைகள் ஏற்படும். மேலும் மீன ராசியினர் நம்பிக்கையுடன் எதிலும் செயல் ஆற்ற தொடங்குவார்கள். மனதிலும் சற்று நிம்மதி ஏற்படும் நேரம் இது. ஆனாலும் சில பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு இருக்கும். 


15.08.2013 முதல் 23.09.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:


மீண்டும் மீன ராசியினர் தொழிலில் நல்ல பலன்களை அனுபவிக்க  தொடங்குவார்கள். மீன ராசியினர் நினைத்த காரியங்கள் எளிய முறையில் ஈடேறும். மனதில் சந்தோஷம் மற்றும் திருப்தி குடி கொண்டு இருக்கும். 


23.09.2013 முதல் 08.11.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:


இந்த காலத்தில் மீன ராசியினர் தொழிலில் நினைத்த விசயங்களை செயல் ஆற்ற சற்று தாமதம் ஆகும். இந்த கால தாமதங்கள் மனதில் சற்று தளர்வினை ஏற்படுத்தும். ஆனாலும் மிக பெரிய தொல்லைகளும் வராது, ஆனால் சிறு சிறு தடைகளை ஏற்படுத்தும் காலம் என்று மீன ராசியினர் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். 


8.11.2013 முதல் 21.02.2014 முடிய  குரு  பெயர்ச்சியின் பலன்கள்:

குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.

மீன ராசியினரின் கவனத்திற்கு:

1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது. 

2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.

3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.

4. குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.

5. நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய துன்பங்கள் நடக்காது.

6. மீன ராசியினருக்கு 10வது வீடு அல்லது செவ்வாய் கிரகத்தின் திசை நடந்து அந்த கிரகம் பலம் இழந்தோ அல்லது துர் ஸ்தானத்தில் இருந்தால் தொழிலில் சற்று பாதிப்பை ஏற்படுத்தும்.


7. மீன ராசியினருக்கு இலக்கின அதிபதி 4வது அல்லது 12வது வீட்டில் இருந்து திசையை நடத்தினால் சற்று சோம்பலுடன் செயலாற்றுவார்கள். 


8. பொதுவாக மீன ராசியினர் சற்று நிதானமாகவும், சோம்பலுடனும் தொழில் மற்றும் எல்லா விசயங்களிலும் செயலாற்ற தொடங்குவார்கள். 


9. குருவின் பலமற்ற பார்வை 8வது, 10வது மற்றும் 12வது வீட்டில் விழுகின்றது.  இதனால் தொழில் விஷயங்கள் சற்று சாதகமாக இருக்கும். 

10. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும். 


குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள். மேலும் உங்கள் ஜாதகத்தை சரியாக கணிப்பதற்கு Author Meganathan. G ஐ தொடர்பு கொள்ளுங்கள். வெளி நாட்டில் வசிப்பவர்கள் Pay Pal மூலம் பணம் செலுத்தி ஜாதகம் பற்றிய முழு விபரங்களை பெற்று கொள்ளலாம். 

Comments

Popular posts from this blog

MEENA LAGNA (PISCES RISING) AND 12 ZODIAC SIGNS

"EFFECTS OF THE MOON (CHANDRA) ON THE MEENA LAGNA (PISCES RISING) IN THE 12 DIFFERENT ZODIAC SIGNS" The Moon has the lordship over the 5th house, which is highly benefic to the Meena Lagna (Pisces Rising). The Moon treats the Guru (who owns the Meena Lagna) as equal but the Guru treats the Moon as its friend. Thus the one-way friendly relationship and the benefic nature of the 5th house gives the Moon more benefic qualities. Let us see the effects of Moon on getting placed in 12 different zodiac signs for the Meena Lagna (Pisces Rising). 1. Meena Lagna and Meena Rasi: "Moon in the Lagna" - Great talks and vice-like grip on money matters. Very selfish attitudes. 2.  Meena Lagna and Mesha Rasi: "Moon in the 2nd house" - Authoritative and selfish in nature.  3.  Meena Lagna and Rishaba Rasi: "Moon in the 3rd house" - Mixed characterestics. Helping tendencies and adjusting mindset but with some selfish interests too. ...

2024 SEPTEMBER PISCES ASTROLOGY PREDICTION

2024 September Pisces Financial Astrology 2024 September Meena Rasipalan For Salaried Peoples: Job searches, Job promotions & Project implementations: Delays are possible from 1 st to 16 th September 2024. Faster feedbacks are possible from 18 th to 30 th September 2024. Work Efficiency: Stable efficiency is possible during the entire month of September 2024. Hurdles are possible from 11 th to 18 th September 2024. Income from Investments: Disappointing returns are possible during the entire month of September 2024. For Business Peoples: Sales & Marketing: Fluctuating sales & delays affecting the marketing is possible from 1 st to 16 th September 2024. Stable sales & good results in marketing effort are possible from 17 th to 30 th September 2024. Productivity: Good productivity is possible during the entire month of September 2024. Hurdles are possible from 11 th to 18 th September 2024. Profits & Payment collections: Fluctuating profits...

MEENA RASIPALAN 2024 AUGUST

2024 August Pisces Financial Astrology 2024 August Pisces Prediction For Salaried Peoples: Job searches, Job promotions & Project implementations: Delays are possible from 1 st to 18 th August 2024. Faster feedbacks are possible from 19 th to 31 st August 2024. Work Efficiency: Stable efficiency is possible during the entire month of August 2024. Income from Investments: Erratic returns are possible during the entire month of August 2024. For Business Peoples: Sales & Marketing: Fluctuating sales & delays affecting the marketing is possible from 1 st to 18 th August 2024. Stable sales & good results in marketing effort are possible from 19 th to 31 st August 2024. Productivity: Good productivity is possible during the entire month of August 2024. Profits & Payment collections: Fluctuating profits & partial payment collections are possible during the entire month of August 2024. Miscellaneous: Expenses, Repayments & managing financ...